Friday, May 19, 2006

SAP உள்ள உட்பிரிவுகள்

SAP-ல் பல உட்பிரிவுகள் உள்ளன, அதின் பலவற்றை நான் வேலைவாய்ப்பு பக்கத்தில் மட்டுமே பார்த்துள்ளேன்.எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் மாற்றப்படும் மென்பொருளாகவும் இந்த SAP பயன்படுகிறது.

ஒரு பெரிய லிமிட்டெட் நிறுவனம் இதை பயன்படுத்தினால் நிறுவனத்தில் ஏற்ப்படும் அனைத்துவித வரவு, செலவுகளை பதித்து கொள்ளவும் அது பொருளாகவோ அல்லது பணமாக எப்படிப்பட்ட போக்குவரத்தையும் யாரால், எப்போது, எங்கு, எதன் பொருட்டு, என்ற அனைத்து விஷயங்களை இதில் சேமிக்கலாம். இதன் மூலம் மிக துல்லியமாக நிறுவனத்திற்க்கு கிடைக்கும் லாப-நஷ்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். தற்ச்சமயத்தில் பல சிறிய நிறுவனங்களும் SAPயை பயன்பதும் வண்ணம் வடிவமைக்க படுகிறது. சதாரணமாக, பணியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் ஒரு முக்கிய தேவையான செலவாக எத்துறையிலும், எந்நிறுவனத்திலும் கருதப்படுகிறது சில சமயங்களில் அதுவே ஏறும் போதும், இறங்கும் போதும் CA படித்த ஆடிட்டர்கள் இம்மாதம் சம்பளம் ஏன் அதிகமாக/குறைவாக கணக்கிடப்படுகிறது என்று தங்களின் தலைமுடியை பிடித்து பிய்த்துக்கொள்வார்கள். அதை எல்லாம் குறைக்க/நீக்க எல்லாம் ஒரே (சீ)நீர்கோட்டில் ஒருங்கிணைக்கப்பட்டதே SAP என்னும் தகவல் பெட்டகம்.

இனி இதில் வரும் சில உட்பிரிவுகள்:

SAP-HR, (Human Resources மனிதவள துறை)

SAP-PP, (Production Planning- தயாரிப்பு மற்றும் திட்டச்செயலியல் துறை)

SAP-MM, (MM - Materials Management பொருள் மேலாண்மை துறை)

SAP-SD, (SD - Sales Distribution விற்பனை பங்கீடு துறை)

SAP-FI, (FI - The Financial Accounting கணக்கியல் மற்றும் பணப்பட்டுவாடா துறை)

SAP-CO,(CO – Controlling- கட்டுப்பாட்டுத் துறை)

SAP-AM, (AM - Asset Management - சொத்து மேலாண்மை )

SAP-PS, (PS- Project Systems - செயல் திட்ட துறை)

SAP-PM, (PM - Plant Maintenance - வன்பொருள் மேலான்மை துறை)

SAP-QM, (QM - Quality Management - தரமேலாண்மை துறை )

SAP-CA, (CA - Cross Applications - பிற துறை)

அடுத்து வரும் பதிவுகளில் சில துறைகளில் வரும் சில பிரிவுகளை பார்ப்போம்.

2 comments:

நிலாரசிகன் said...

SAP - SRM?

சிவமுருகன் said...

SAP SRM Means - SAP Supplier Relationship Management. Like Vendor details for said stationaries to Raw Materials for the company's production.