Friday, May 19, 2006

SAP பற்றி - முகவுரை

வணக்கம். ஆன்மீகத்தில் சுற்றி வந்த நான் தற்போது ஒரு சின்ன திருப்பம். நான் தினம் செய்யும் வேலைகளை பற்றியும், கற்றுக்கொள்ளும் புதிய வேலைகளை பற்றியும் இப்பதிவில் நான் எழுத போகிறேன்.

நான் தற்போது (என்ன தற்போது - கடந்த 2 ஆண்டுகளாக) SAP Technical Assistant-ஆக இருந்து வருகிறேன். அங்கு நடக்கும் புதிய தொழில்நுட்ப செய்திகளையும், மேலும் சில தகவலையும் இங்கே ஒரு தொடராக பதிக்க போகிறேன். என்றும் போல் ஆதரவு வேண்டி நிற்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் கல்லூரி நன்பர்கள் குழுமத்திலிருக்கும் தோழர் ஜெயகுமார் ‘உமது தொழில் ப்ரோகிராமிங் அதை பற்றி எதாவது எழுதலாமே’ என்று கேட்டார். அப்போது “என்சோகம் என்னோடு தான்” என்று பதிலளித்தேன். நகைசுவையாக அப்படி ஒரு பதில் அளித்தேனே தவிற அதில் சற்று கவனம் செலுத்தி பார்க்கும் போது. அட இதையும் எழுதினால் நன்றாக இருக்குமே(?) என்று எண்ணினேன். இந்த projectஐ உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், தங்களின் மேலான கருத்துக்களை பெறவுமே இந்த பதிவு. (அப்பாட அடுத்த 52 வார பதிவிற்க்கு ஒரு கரு கிடைத்து விட்டது)

தற்போது முதலில் SAP பற்றி அறிமுகம்.

சாப்(SAP)-ஒரு application server, database, front-end tool என்று எல்லாம் ஒருங்கே இணைந்த ஒரு முழு தொகுப்பு. அதைபற்றி அறிமுகம் இந்த பதிவில். கணினியியல் பற்றிய பதிவு என்பதால் அதிகமாக ஆங்கில வார்த்தைகள் வரும், பொறுத்தருள்க.

நான் அதிகமாக SAPல் உலாவருவது ஹுமன் ரிஸோர்ஸஸ் என்ன படும் HRலிருக்கும் personal administration module ஆகவே அதில் வரும் functionஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில சமயங்களில் payroll எனப்படும் finance moduleம், HRன் பிற moduleகளான time moduleம், recruitment moduleம் வரும்.

24 comments:

ENNAR said...

எழுதுங்கள் சிவா வரவேற்கிறேன்

சிவமுருகன் said...

வருக விஷ்ணு. இன்று தான் ஆரம்பம். தினமும் ஒரு பதிவு இதில் வரும். கற்பதற்க்கு சில தகவல் கிடைக்கும். ஆனால் இதையே முழு தகவலாக கொள்ள வேண்டாம்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

ஊக்கபடுத்தியமைக்கு மிக்க நன்றி என்னார் ஐயா.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்பதற்கு முழு விளக்கம் அளிக்கமுடியுமா. தொடர்ந்து எழுதுங்கள்.உங்களின் அறிவுபகிர்வுக்கு நன்றி தி. ரா. ச

சிவமுருகன் said...

அன்புள்ள தி.ரா.ச.
SAP - என்றால் System Application Process என்றும் System Application Programs என்றும் சொல்வர்.

எந்த வேலையும் ஒரு வரைமுறையுடன் (systemetic) செய்யப்படும் போது அதன் வேகமும், போக்கும், மெருகேருகிறது. இதுவே சாதாரண மென்பொருளுக்கும், SAP க்கும் உள்ள பெரிய வேற்றுமை.

NambikkaiRAMA said...

வாழ்த்துக்கள் சிவமுருகன்!

சிவமுருகன் said...

வாங்க பாஸிட்டிவ்ராமா,
வாழ்த்துக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

நாமக்கல் சிபி said...

உபயோகமான தகவல்கள் தருகிறீர்கள் சிவமுருகன். நன்றி.

(காப்பிரைட் பிரச்னை ஏதாவது வந்துடப் போகுது, பார்த்துக்குங்க)

சிவமுருகன் said...

//உபயோகமான தகவல்கள் தருகிறீர்கள் சிவமுருகன். நன்றி.//
நன்றி சிபி சார்.

//(காப்பிரைட் பிரச்னை ஏதாவது வந்துடப் போகுது, பார்த்துக்குங்க) //
(ஏது நீங்களே போய் போட்டு குடுப்பீங்க போல!)

இங்கே சில பொதுவான தகவல்கள் தான் வரும் என்பதால் அந்த அளவுக்கு பிரச்சனை இருக்காது என்று எண்ணுகிறேன்.

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்.

சிவமுருகன் said...

பெருவிஜயன் சார் வாங்க வாங்க,

ரொம்ப சந்தோஷம், நீங்க வந்த நேரம் நம்ம SAP -பதிவு நம்ம தமிழ்மணத்தில் சேர்ந்துள்ளது, வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி.

ப்ரியன் said...

நல்ல விசயம் சிவா!என்னைப் போன்ற SAP க்கு புதியவர்களுக்கு பயனளிக்கும் பக்கம் தொடருங்கள் :)

தினேஷ் said...

Me too intresting about SAP.
Because i am Non IT.
Eager to know about this.

Go Ahead...

சிவமுருகன் said...

வாங்க ப்ரியன்,
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

சிவமுருகன் said...

வாங்க செல்வா,

பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் இன்னு சொல்றா மாதிரி ரெண்டு, பின்னூட்டம் போட்டிருக்கீங்க.

வருகைக்கும், இரு பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

வாங்க தினேஷ்,

நானும் ஒரு SAP-ஸ்டுடண்ட் தான்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

வாங்க Krishnan,

நானும் ஒரு SAP-ஸ்டுடண்ட் தான். I'm working in HR-PA/Time module.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

wisethink said...

shiva,

very informative ...keep it up..
please help me also with your spiritual knowledge...i want to do research in kural...will write abt it separately later..

how can i write my comments in tamil

Sivabalan said...

சிவமுருகன்,

நல்ல விசயம். தொடரட்டும் இந்த மேலான பணி.

வாழ்த்துக்கள்.

ஓகை said...

நல்ல முயற்சி. நான் அறிந்துகொள்ள விரும்பியதைப் பற்றிய பதிவி. வரவேற்கிறேன்.

நாமக்கல் சிபி said...

நல்ல முயற்சி. எங்களை மாதிரி பாமரர்களுக்கு புரியர மாதிரி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஓகை said...

பயனுள்ள ஒரு தொடரைத் தொடங்கியிருக்கிறீர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்.

ராஜரத்தினம் said...

மிகச் சிறந்த பணி.. தமிழின் முக்கிய தேவைகளில் அறிவியல் மற்றும் நவீனமயப்படுதுதல் தான். SAP போன்ற முக்கிய உபயோகம் சார்ந்த மென் பொருட்களை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதற்கு நன்றி.. கணினி சார்ந்த, SAP சார்ந்த கலைச்சொற்களை தமிழில் மேலும் அறிமுகப்படுத்துவீர்கள் என ஆர்வமாய் காத்திருக்கிறேன்..

Tech Shankar said...

Thanks dear dude. It is amazing to see a blog for SAP in Tamil. I like it.