Friday, May 19, 2006

SAP உள்ள உட்பிரிவுகள்

SAP-ல் பல உட்பிரிவுகள் உள்ளன, அதின் பலவற்றை நான் வேலைவாய்ப்பு பக்கத்தில் மட்டுமே பார்த்துள்ளேன்.எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் மாற்றப்படும் மென்பொருளாகவும் இந்த SAP பயன்படுகிறது.

ஒரு பெரிய லிமிட்டெட் நிறுவனம் இதை பயன்படுத்தினால் நிறுவனத்தில் ஏற்ப்படும் அனைத்துவித வரவு, செலவுகளை பதித்து கொள்ளவும் அது பொருளாகவோ அல்லது பணமாக எப்படிப்பட்ட போக்குவரத்தையும் யாரால், எப்போது, எங்கு, எதன் பொருட்டு, என்ற அனைத்து விஷயங்களை இதில் சேமிக்கலாம். இதன் மூலம் மிக துல்லியமாக நிறுவனத்திற்க்கு கிடைக்கும் லாப-நஷ்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். தற்ச்சமயத்தில் பல சிறிய நிறுவனங்களும் SAPயை பயன்பதும் வண்ணம் வடிவமைக்க படுகிறது. சதாரணமாக, பணியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் ஒரு முக்கிய தேவையான செலவாக எத்துறையிலும், எந்நிறுவனத்திலும் கருதப்படுகிறது சில சமயங்களில் அதுவே ஏறும் போதும், இறங்கும் போதும் CA படித்த ஆடிட்டர்கள் இம்மாதம் சம்பளம் ஏன் அதிகமாக/குறைவாக கணக்கிடப்படுகிறது என்று தங்களின் தலைமுடியை பிடித்து பிய்த்துக்கொள்வார்கள். அதை எல்லாம் குறைக்க/நீக்க எல்லாம் ஒரே (சீ)நீர்கோட்டில் ஒருங்கிணைக்கப்பட்டதே SAP என்னும் தகவல் பெட்டகம்.

இனி இதில் வரும் சில உட்பிரிவுகள்:

SAP-HR, (Human Resources மனிதவள துறை)

SAP-PP, (Production Planning- தயாரிப்பு மற்றும் திட்டச்செயலியல் துறை)

SAP-MM, (MM - Materials Management பொருள் மேலாண்மை துறை)

SAP-SD, (SD - Sales Distribution விற்பனை பங்கீடு துறை)

SAP-FI, (FI - The Financial Accounting கணக்கியல் மற்றும் பணப்பட்டுவாடா துறை)

SAP-CO,(CO – Controlling- கட்டுப்பாட்டுத் துறை)

SAP-AM, (AM - Asset Management - சொத்து மேலாண்மை )

SAP-PS, (PS- Project Systems - செயல் திட்ட துறை)

SAP-PM, (PM - Plant Maintenance - வன்பொருள் மேலான்மை துறை)

SAP-QM, (QM - Quality Management - தரமேலாண்மை துறை )

SAP-CA, (CA - Cross Applications - பிற துறை)

அடுத்து வரும் பதிவுகளில் சில துறைகளில் வரும் சில பிரிவுகளை பார்ப்போம்.

SAP பற்றி - முகவுரை

வணக்கம். ஆன்மீகத்தில் சுற்றி வந்த நான் தற்போது ஒரு சின்ன திருப்பம். நான் தினம் செய்யும் வேலைகளை பற்றியும், கற்றுக்கொள்ளும் புதிய வேலைகளை பற்றியும் இப்பதிவில் நான் எழுத போகிறேன்.

நான் தற்போது (என்ன தற்போது - கடந்த 2 ஆண்டுகளாக) SAP Technical Assistant-ஆக இருந்து வருகிறேன். அங்கு நடக்கும் புதிய தொழில்நுட்ப செய்திகளையும், மேலும் சில தகவலையும் இங்கே ஒரு தொடராக பதிக்க போகிறேன். என்றும் போல் ஆதரவு வேண்டி நிற்கிறேன்.

சில நாட்களுக்கு முன் என் கல்லூரி நன்பர்கள் குழுமத்திலிருக்கும் தோழர் ஜெயகுமார் ‘உமது தொழில் ப்ரோகிராமிங் அதை பற்றி எதாவது எழுதலாமே’ என்று கேட்டார். அப்போது “என்சோகம் என்னோடு தான்” என்று பதிலளித்தேன். நகைசுவையாக அப்படி ஒரு பதில் அளித்தேனே தவிற அதில் சற்று கவனம் செலுத்தி பார்க்கும் போது. அட இதையும் எழுதினால் நன்றாக இருக்குமே(?) என்று எண்ணினேன். இந்த projectஐ உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், தங்களின் மேலான கருத்துக்களை பெறவுமே இந்த பதிவு. (அப்பாட அடுத்த 52 வார பதிவிற்க்கு ஒரு கரு கிடைத்து விட்டது)

தற்போது முதலில் SAP பற்றி அறிமுகம்.

சாப்(SAP)-ஒரு application server, database, front-end tool என்று எல்லாம் ஒருங்கே இணைந்த ஒரு முழு தொகுப்பு. அதைபற்றி அறிமுகம் இந்த பதிவில். கணினியியல் பற்றிய பதிவு என்பதால் அதிகமாக ஆங்கில வார்த்தைகள் வரும், பொறுத்தருள்க.

நான் அதிகமாக SAPல் உலாவருவது ஹுமன் ரிஸோர்ஸஸ் என்ன படும் HRலிருக்கும் personal administration module ஆகவே அதில் வரும் functionஐ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில சமயங்களில் payroll எனப்படும் finance moduleம், HRன் பிற moduleகளான time moduleம், recruitment moduleம் வரும்.